அமுலுக்கு வரவிருக்கும் குழாய் நீர் கட்டண அதிகரிப்பு
நீர் மற்றும் கழிவு நீர் அமைப்புக்குரிய கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அனைத்து நீர் பாவனையாளர்களும் தொகுதிகளாப் பிரிக்கப்பட்டு அதற்கமைய கட்டண விதிப்பு முறைமை குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாவனையாளர்கள் 12 தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த விபரம்
‘சமூர்த்தி பெறுநர்கள் மற்றும் தோட்டக்குடியிருப்பல்லாத ஏனையோர்’, ‘சமூர்த்தி பெறுநர்கள் அல்லாத தோட்டக் குடியிருப்பாளர்கள்’, ‘பொதுநீர் குழாய் மற்றும் பூங்கா நீர்குழாய்’, ‘பாடசாலைகள், மத வழிபாட்டுத்தளங்கள்’ , ‘அரச நிறுவனங்கள், சிறிய – நடுத்தர கைத்தொழில் அல்லாத ஏனைய தொழில்கள்’, ‘அரச வைத்தியசாலைகள்’ , ‘சிறிய – நடுத்தர கைத்தொழில்கள்’, ‘வணிக நிறுவனங்கள்’ , ‘துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து’ , ‘முதலீட்டு சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு நீர் வழங்குதல்’ , ‘மொத்தமாக நீர் வழங்குதல்’ என்பன குறித்த 12 வகைப்படுத்தல்களாகும்.
அதற்கமைய சமூர்த்தி பெறுநர்களுக்கு 75 அலகுகளுக்கு மேல் ஒவ்வொரு அலகுக்கும் 140 ரூபா பாவனைக் கட்டணமும் , 1,600 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறிவிடப்படவுள்ளது. சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் தோட்டக்குடியிருப்பல்லாத ஏனையோருக்கு 75 அலகுகளுக்கு மேல் ஒவ்வொரு அலகுக்கும் 245 ரூபா பாவனைக் கட்டணமும் , 3,500 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறிவிடப்படவுள்ளது.