மாகாணசபைத் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் பிள்ளையான் தரப்பு!
கடந்த நல்லாட்சி_காலத்தில்தான் இலங்கையில் அதிகளவான வீட்டுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டின் 156 மாதிரிக் கிராமங்கள் மூலமாக 4,363 வீடுகள்.
அதோடு zion தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு தனி மாதிரிக் கிராமம் , சொந்த காணியில் வீடு இல்லாதவங்களுக்கு வீடு மற்றும் பூரணப்படுத்தப்படாத பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் திருத்த வேலைகள் செய்ய உதவித் தொகை என விட்டுத் திட்டங்கள் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் கொண்டுவரப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஞானமுத்து சிறிநேசன்,(Gnanamuttu Sirinesan) யோகேஸ்வரன் (Vettivelu Yogeswaran) மற்றும் வியாழேந்திரன் (S. Viyalendiran) ஆகியோரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டங்கள்தான் அவை. ஆனால் தற்போது கட்சி மாறிய வியாளேந்திரன் கடந்த நல்லாட்சி காலத்தில் எதைச் செய்தார்கள் என்று கூறுவது வேடிக்கையானது.
அவற்றில் 50%க்கும் அதிகமான வீட்டுத் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்டதை நீங்கள் அறியவில்லையா? அல்லது தெரிந்தும் வெளியில் சொல்ல வெட்கமா? முடிந்தால் நிறைவு செய்யப்பட்ட அந்த வீட்டுத் திட்ட வீடுகளுக்குள் ஒரு தடவை சென்று பாருங்கள் புரியும் எத்தனை வசதியான வீடுகள் சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்பு, பாதை வசதி, மின்சார வசதி, நீர்ப்பாசன வசதி என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
உங்கள் ஆட்சிக்காலத்தில் இவ்வாறு எத்தனை வீட்டுத் திட்டங்களை செய்துள்ளீர்கள்? சரி கடந்த நல்லாட்சி அரசால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட பெயர்ப் பலகையைக் கூடப் பாதுகாக்க முடியாத கையாலாகாத தனத்தைதான் காட்டி நிற்கிறது உங்கள் ஆளுமை.

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா ஒரு நாட்டில் ஒரு அரசாங்கம் கொண்டு வந்த திட்டத்தை அரசு மாறினாலும் அடுத்து வரும் அரசாங்கம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது? அது நாட்டுக்கு பாரதூரமான விடயமாக இருந்தால் மட்டுமே பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் இடை நிறுத்த முடியும்.
ஆனால் மஹிந்த காலத்தில் 18ம் திருத்தத்தினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த சில அரசியலமைப்புக்கு முறனான சரத்துக்களை மாற்றி கடந்த நல்லாட்சி அரசு ஜனாதிபதிக்கான அதிகாரத்தை குறைத்து கொண்டுவந்த 19வது திருத்தத்தை உங்கள் அரசு 20வது திருத்தத்தின் மூலம் மீண்டும் மாற்றியதைத் தவிர எதைச் செய்தார்கள்? அதற்குக் கூட உங்களது தலைவர் இரு கரங்களையும் உயர்த்தி ஆதரித்து அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துள்ளார்.

இந்த வீட்டுத் திட்டத்தை ஏன் உங்களது அரசால் தொடர்ந்து முடிக்காமல் போனது? காரணம் இனி அதை யார் செய்தாலும் அதற்கான பெயர் கடந்த நல்லாட்சி அரசை அல்லது தமிழ்_தேசியக்_கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிறிநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு கிடைதத்துவிடும் என்ற காரணமா?
தேர்தல் முடிந்து ஒருவருடங்களாக உங்கள் பிரதிகள் யாரும் சென்று பார்க்காத இந்த வீட்டுத் திட்டங்களைப் பற்றி எப்போதாவது ஒரு தடவை உங்களது ஐயா பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேசியுள்ளா? ஆனால் சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) மூன்றுமுறை இதைப் பற்றி பேசியுள்ளார்.
தற்போது மாகாணசபைத் தேர்தல் நடக்கப் போவதாக அறிவித்தல் வந்து மறு நாள்தான் உங்களுக்கு கண்ணில் பட்டதா இந்த வீட்டுத் திட்டங்கள். அதிலும் குறைகாணத்தான் சென்றீர்களா? என சமூக ஆர்வலர் ஒருவர் மூகநூலில் குறித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் திட்டமிடப்படாத வகையில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுமைப்பு திட்ட குடியிருப்புகள் மக்கள் குடியோறிய முடியாத நிலையில் பாம்பு புற்று உருவாகி இருப்பதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு சமூக ஆர்வலர் சோமசூரியம் திருமாறன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.