ஒரு துண்டு கரும்பால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் எவையென தெரியுமா?
பொங்கல் பண்டிகை என்றதுமே முதலில் நினைவிற்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். இந்த கரும்பு ஏராளமான சத்துக்களை கொண்டது. கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இங்கு பார்ப்போம்.

வாய் ஆரோக்கியம்
"கரும்பை நன்கு கடித்து மென்று சாப்பிடும் போது வாயின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன" எனவே உங்கள் வாயின் ஆரோக்கியம் எளிய வழியில் மேம்பட நினைத்தால், கரும்பை அதிகம் சாப்பிடுவது நல்லது.

மலச்சிக்கல் நீங்கும்
"கரும்பில் மலமிளக்கும் பண்புகள் உள்ளன. ஆகவே மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கரும்பை உட்கொள்ளும்போது, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்". தற்போது மலச்சிக்கல் பிரச்சனையை நிறைய பேர் சந்திக்கின்றனர். நீங்கள் இப்பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட விரும்பினால், கரும்பை சாப்பிடுங்கள் போதும்.

சிறுநீர் பிரச்சனை
கரும்பில் டையூரிக் பண்புகள் உள்ளன. எனவே சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த எரிச்சலை சந்திப்பவர்கள், கரும்பை உட்கொண்டால், சிறுநீர் கழிப்பதில் சந்திக்கும் பிரச்சனை தடுக்கப்படும்

கல்லீரலை சுத்தப்படுத்தும்
கரும்பில் உள்ள பாலிஃபீனால்களும், ஃப்ளேவோனாய்டுகளும் கல்லீரலை சுத்தம் செய்யும் நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு கரும்பு ஜூஸ் ஒரு சிகிச்சையாக அளிக்கப்பட்டு வருகிறது.
