சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களால் சர்ச்சை!
உயிரிழந்த திமிங்கிலத்தின் மீது சிறுவர்கள் ஏறி நிற்க்கும் படங்கள சமூக ஊடங்களில் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.
கல்பிட்டியில் உயிரிழந்த திமிங்கிலங்கள் மீது சிறுவர்கள் ஏறி நிற்க்கும் படங்களிற்கே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன
உயிரிழந்த திமிங்கிலங்கள் மீது சிறுவர்கள் ஏறி நிற்பதையும் அதனை பெரியவர்கள் பார்ப்பதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
சில சிறுவர்கள் இறந்தநிலையில் காணப்படும் திமிங்கிலங்களின் உடற்பாகங்களை இழுத்து விளையாடுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.
யுவதியொருவர் திமிங்கிலத்தின்மீது அமர்ந்திருக்கின்றார்.
இறந்த நிலையில் காணப்படும் திமிங்கிலத்துடன் செல்பி எடுத்துக்கொண்டமையும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.