இலங்கையில் பலரையும் கண் கலங்கவைத்த ஒற்றைப் புகைப்படம்
காலி – ஹினிதும, தவலம பிரதேசத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் டீசல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று திடீரென உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் தனது பாரவூர்திக்கு டீசலை பெற்றுக் கொள்வதற்காக சுமார் ஒரு மணிநேரம் வரை அங்கு காத்திருந்த நிலையில், உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் இறந்த கணவனை கட்டியணைத்து மனைவி கதறி அழும் புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அதேசமயம் நாட்டில் எரிபொருளுக்காக  வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
எரிபொருளுக்காக காத்திருந்த மற்றுமொருவருக்கு நேர்ந்த பெரும் சோகம்