மாயமான தேசபந்து தென்னகோனின் தொலைபேசி
சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் கடந்த 23 ஆம் திகதி சி.ஐ.டியினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
எனினும் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து தொலைபேசியை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
காலிமுகத்திடல் மோதல்
மே 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற தலையீடுகளை தவிர்ப்பதற்காக சட்டமா அதிபர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை தேசபந்து தென்னகோன் சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் காணப்பட்டார், அவர் கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன செய்தது போல் சாட்சியங்களை அழிக்க நேரம் கொடுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.