திடீரென கழன்று ஓடிய சொகுசு பேருந்தின் சில்லுகள்; பயணிகளின் திக்...திக்.. நிமிடங்கள்
சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டியின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த இரு சில்லுகளே அச்சாணியை விட்டு விலகி வெளியே வந்துள்ளது.
அச்சத்தில் உறைந்த பயணிகள்
அதனை அவதானித்து உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் எவ்விதமான ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் சில்லுகள் இரண்டும் வெளியே வந்தமை, புசல்லாவை பகுதியில் வைத்து அவதானிக்கப்பட்டு, வண்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்ட நிலையில் சம்பவத்தால் பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.