மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கம்
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலால் தற்போது நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உடனடி உதவிகளுக்காகத் தொடர்புகொள்ளக்கூடிய அவசர தொலைபேசி இலக்கங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவிற்கிடையில் நடந்து வரும் மோதல் நிலையின் விளைவாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தை சுற்றியிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பதற்றநிலை தீவிரமடைந்துள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கம்
எனவே மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும்/ பணிபுரியும் இலங்கையர்கள் தற்போதைய பதற்ற சூழ்நிலையில் அவசர உதவிகளுக்காகத் தம்மைத் தொடர்புகொள்வதற்கென கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகார சேவை பிரிவு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 0094711 757 536 அல்லது 0094711 466 585 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வெளிவிவகார அமைச்சைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதற்கு மேலதிகமாக வழமையான வேலை நேரங்களில் 1094 112 338 837 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது repatriation.consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகார சேவை பிரிவைத் தொடர்புகொள்ளமுடியும்.