இலங்கையில் பைசர் தடுப்பூசி தொடர்பில் வந்த எச்சரிக்கை!
இலங்கையில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான பைசர் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக, தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினைத் நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அதோடு பைசர் தடுப்பூசியின் செயற்பாடு தொடர்பில் விஞ்ஞான ரீதியில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பைசர் தடுப்பூசியானது, கொரோனா பரவலுக்கு பின்னரான காலத்திலேயே முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே தனக்கு இந்த தடுப்பூசி குறித்து சந்தேகம் நிலவுவதாகவு ம் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
எனவே இலங்கைக்கு பைசர் தடுப்பூசியினை இறக்குமதி செய்வதனை இயலுமானளவு குறைத்துக்கொள்ளுவதுடன் , மாற்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கோரிக்கை விடுத்துள்ளார்.