வெளிநாட்டிலிருந்து கடும் அச்சுறுத்தல் : இலங்கையில் தொடர்ந்து தாக்கப்படும் கோடீஸ்வரரின் வீடு
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள கோடீஸ்வரரின் வீடு ஒன்று தாக்குதலுக்கு உள்ளனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதுருகிரி, கல்வருசாவ வீதியில் அமைந்துள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகர் ஒருவரின் வீடொன்றின் மீது நேற்று மாலை நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர், குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் மலர்வளையம் வைத்தமை தொடர்பில் பல சந்தேக நபர்கள் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கப்பம் கோரும் நபர்
வெளிநாட்டிலுள்ள பாதாள உலக செயற்பாட்டாளரான கைவாரு முத்து என்பவரால் குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரப்பட்டுள்ளது.
குறித்த கப்பம் பணத்தை செலுத்தாத காரணத்தினால் அவரை அச்சுறுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.