இணையத்தளவாசிகளை தன்பக்கம் திருப்பிய செல்லப்பிராணி ; வைரலாகும் காணொளி!
நாய் ஒன்றின் செயல் தற்பொழுது இளையத்தளத்தில் வரலாகி வருகின்றது. பொதுவாகவே செல்லப்பிராணிகளாக பூனை, பறவைகள், மீன்கள் , ஏனைய விலங்குகளை வளர்ப்பதை காட்டிலும் நாய்களை வளர்ப்பதை பலரும் பிடித்த ஒன்றாக கருதுகின்றனர்.
இந்நிலையில் தற்போது கோல்டன் ரெட்ரீவர் நாயின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. @beckx28 என்ற பயனர் ஒருவர் இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் நாய் ஒன்று உணவைத் திருட முயன்ற போது அதன் உரிமையாளர் நாயின் செயலை கவனித்து கொண்டிருக்கின்றார். உணவினை சமையல் அறையில் இருந்து நாசுக்காக எடுக்கும் நாய் அதன் வாயால் சமையல் அறையில் இருக்கும் இரண்டு டப்பாக்களை எடுக்க முயற்சி செய்து பின்னர் மேல் பகுதியில் இருக்கும் சிறிய டப்பாவை வாயால் கவ்விக்கொண்டு செல்கின்றது.
Caught ya ?? pic.twitter.com/Z39TVM5yWN
— Rebecca (@beckx28) October 14, 2021
இதனை பார்த்த அதன் உரிமையாளர் நாயினை சற்று கண்டிக்க நாய் அந்த உணவு டப்பாவை கீழே வைத்துவிடுகின்றது.
இக்காணொளியை 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன், தற்பொழுது சமூகவலை தளங்களிலும் வைரலாகி வருவதுடன், காணொளியை பார்த்த பலரும் நாயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.