தமிழர் பகுதியில் அடங்காத நபர்கள்; அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் உள்ள பெரும் காடுகளுக்குள் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (10) தர்மபுரம் பகுதியில் 6 பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர்.
சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும் கோடாக்களும் கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் அதே பகுதியில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கம் மற்றும் கிராமத்து இளைஞர்கள் என பலர் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.