யாழில் வீதியில் குப்பைகளை கொட்டிய நபர்கள்; அதன் பின்னர் இடம்பெற்ற தரமான சம்பவம்!
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் குப்பைகளை வீசி சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால் கொட்டிய குப்பைகளை அவரே அள்ளிச் சென்ற தரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் உழவு இயந்திரத்தில் தன்னுடைய வீட்டு குப்பைகளை ஏற்றிவந்த மக்கள் பாவனையில் உள்ள வீதிகளில் பொறுப்பற்ற தனாமாக குப்பைகளை வீசிவிட்டு சென்றிருக்கின்றார்.
இது தொடர்பாக அப்பகுதில் பிரதேசசபை உறுப்பினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராக்களை ஆராய்ந்துள்ளார்.
இதன்போது வேண்டுமென்றே குப்பைகளை வீசி சென்றமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை ஆதாரமாக கொண்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குப்பைகளை வீசி சென்ற நபரை அடையாளம் கண்ட பொலிஸார், குறித்த நபரை அழைத்து கண்டித்துள்ளனர்.
அதோடு கொட்டிய குப்பைகளை அகற்றவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து குப்பையை வீசிய நபரும், குப்பைக்கு சொந்தக்காரரான கடை உரிமையாளர் ஒருவரும் பொதுமக்கள் முன்னிலையில் தாம் கொட்டிய குப்பைகளை மீண்டும் அள்ளிசென்று அகற்றியுள்ளனர்.



