முற்றத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர் திடீர் மரணம்
வெலிகம, பெலென பகுதியில் வீட்டு முற்றத்தில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
58 வயதுடைய குறித்த நபர் வீட்டின் வேலியை வெட்டிக்கொண்டிருந்தபோதே, திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த நிலையில், உறவினர்கள் அவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன், மரணத்திற்கான காரணம் மாரடைப்பு எனவும் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.