பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றவர் அதிரடியாக கைது
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் நேற்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். பெம்முல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்
கைதானவர் நேற்று காலை 10.50 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாததால் பொலிஸார், போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.
இதது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.