பொலிஸ் நிலையத்திற்குள் சந்தேகநபர்களுக்கு விஷம் கொடுத்த நபர்! சிசிரிவியில் சிக்கிய காட்சி
கொழும்பு - ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கொடுத்த நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இரு சந்தேகநபர்களும் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இவர்களின் நலம் விசாரிக்க வந்த நபர் ஒருவரால் விஷம் கொடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நபர் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அங்குள்ள கடை ஒன்றுக்கும் சென்ற காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவரால் விஷம் கொடுக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கும் அவரும் புகுடு கண்ணா என்ற குற்றவாளியின் உதவியாளர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடு செல்வியின் குழுவின் ஒருவர் மீதே இவர்கள் துப்பாக்கிச்சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, குடு செல்வி தரப்பு இந்த நபருக்கு பணம் கொடுத்து இந்த குற்றத்தை திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இச் சம்பவம் தொடர்ந்து ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதி உத்தியோகத்தர் மற்றும் வாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.