தந்தை - மற்றவர்களையும் உயிருடன் கரைக்கு கொண்டு வந்து தாருங்கள்! மகன் உருக்கமான கோரிக்கை
நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 22 நாட்களுக்கு முன்னர் புறப்பட்ட ‘ஜெரொம் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என படகில் சென்றவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு, வெல்லவீதிய, தொடுவாவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் நால்வர் கடலுக்குச் சென்றுள்ளனர்.
கடலுக்கு சென்றவர்களின் உறவினர் ஒருவர் தெரிவித்தாவது,
"எங்கள் தந்தை கடலுக்குச் சென்று இன்று 20 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் எந்தச் செய்தியும் இல்லை.
அவர்கள் சிரமத்தில் இருந்தால் அவர்களைக் காப்பாற்றுமாறு எனது தந்தையையும் மற்றவர்களையும் உயிருடன் கரைக்கு கொண்டு வந்து தாருங்கள்." என காணாமல் போனவர்களின் ஒருவரின் மகன் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.