கட்டாரில் கொல்லப்பட்டவர் இலங்கையர் அல்ல! வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
கட்டார் தோஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கட்டாரில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் வெளியான இந்த செய்தி தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் பிரிவிடம் இது குறித்து ஆராயுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரதானி சட்டத்தரணி கீர்த்தி முத்துக்குமாரன சம்பவம் நடந்த பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது தொடர்பில் வினவியுள்ளார்.
இதன்போது உயிரிழந்த நபர் இலங்கையர் இல்லை என அப்பகுதி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்பின்னர், அப்பகுதியில் உள்ள மருத்துவமனையையும் சோதனையிட்டபோது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் கிடைக்கவில்லை என்பது உறுதி செய்யபட்டுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கட்டாரில் இலங்கையர் ஒருவர் கடந்தவாரம் சொட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.