சஹ்ரான் குழு பற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியவரின் தற்போதைய நிலை!
பயங்கரவாதி சஹ்ரான் குழு பற்றிய தகவலை பொலிஸாருக்கு வழங்கியதால் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த நபருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) பணப்பரிசு வழங்கியுள்ளார்.
சஹ்ரான் குழுவினரால் மாவனல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது பற்றிய தகவலை அவரே பொலிசாருக்கு வழங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மீது சஹ்ரான் குழு கொலை முயற்சியில் ஈடுபட்டது.
உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார். எனினும், அவரால் நடமாட முடியாத நிலையேற்பட்டது. தகவல் கொடுத்ததற்காக பயங்கரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட தஸ்லிம் இப்போது முடக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லினுக்கு இலங்கை பொலிஸாரினால் ரூபா 2.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.