மட்டக்களப்பில் இடம் பெற்ற விபத்தில் நபர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி புனாணை எனும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை (24) விபத்தில் படுகாயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர்
கடந்த வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் ஓட்டமாவடி நோக்கி சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் ஸ்தலத்திலேயே 25 வயதான எஸ்.எச்.எம்.அஸாம் எனும் பாடசாலை ஆசிரியர் உயிரிழந்தார்.
இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மற்ற இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய புஹார்தீன் நுஸைக் அஹமட் என்பவர் ஆவார்.