காணிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முயன்ற நபருக்கு நேர்ந்த சோகம்!
பதுளை - கிராந்துருகோட்டை செனவிகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (07-11-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கிராந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு 9.00 மணியளவில் தனது காணிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது யானை குறித்த நபரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.