ஹீட்டர் போட்டவருக்கு நேர்ந்த விபரீதம்
ஹீட்டருக்குள் தண்ணீரை ஊற்றி அதனை சூடாக்குவதற்காக சுவிட்சை அமில்த்தியபோது மின்னல் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொன்கஹருப்ப பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 66 வயதான திருமணம் ஆகாத ஆணொருவரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ள நிலையில் அவரின் வீட்டிற்கு அருகருகே உறவினர்கள் சிலர் வசித்து வந்துள்ளனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது மின்னல் தாக்கத்தினால் முதியவர் உடல் கருகி உயிரிழந்து கிடப்பதை கண்டுள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.