மன்னாரில் STFஆல் கைது செய்யப்பட்ட நபர் ; சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி
மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க பயன்படுத்தப்படும், வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து வணிக வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வணிக வெடிபொருட்கள்
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்கள் , மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்த போது இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து வணிக வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.