மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி
இந்தியாவில் இருந்து 2 இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அனுமதியின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கால்நடை தீவன விலைகள் ஓரளவு குறையும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் மக்காச்சோளத்தின் விலை அதிகமாக இருந்த நிலையில் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், இறக்குமதி தாமதமாகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அனுமதியின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்துடன் கால்நடை தீவன விலைகள் ஓரளவு குறையும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.