ஹொரணை அரச வங்கி உதவி மேலாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Sri Lanka Police Kalutara Sri Lanka Police Investigation Crime Court of Appeal of Sri Lanka
By Sahana Jun 06, 2026 05:13 PM GMT
Report

களுத்துறை ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி மேலாளரை 6 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஹொரணை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் ஒருவர் பலி, 12 பேர் காயம்

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் ஒருவர் பலி, 12 பேர் காயம்

மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் பாதுகாப்பு அதிகாரி வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் பல ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பு செய்வதற்காக 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணத்தைக் கொண்டு சென்ற போது, கொள்ளையன் ஒருவன் அதனைப் பறித்துச் சென்றதாக கடந்த ஜூன் 3ஆம் திகதி ஹொரணை தலைமையகப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

இந்தப் பணத்திற்குப் பொறுப்பாக இருந்த உதவி மேலாளரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திய போதிலும், எந்தவொரு முக்கிய தடயமும் கண்டறியப்படாததால், பொலிஸ் மா அதிபர் இந்த விசாரணையை பேலியகொட வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தார்.

அப்பிரிவு அதிகாரிகள் வங்கியின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்த போது, சம்பவத்தன்று காலையில் வங்கியின் உதவி மேலாளர் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து பணத்தை எடுப்பது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

வங்கிக்கு வெளியே செல்லும் பகுதியில் சிசிடிவி கெமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. எனினும், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கெமராக்களைப் பரிசோதித்த விசாரணை அதிகாரிகளுக்கு, சந்தேகத்திற்கிடமான எவரும் பணப்பைகளை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் தென்படவில்லை.

ஹொரணை அரச வங்கி உதவி மேலாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி | Permission Interrogate Horana Bank Assistant Manag

அதேநேரம், வங்கி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்குள்ள இரும்பு கழிவுகள் போடும் கொள்கலன் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,740,000 ரூபா பணத்தை விசாரணை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேகநபரான உதவி மேலாளர், வங்கியின் பாதுகாப்பு அதிகாரியையும் தன்வசப்படுத்திக் கொண்டு, மிகவும் திட்டமிட்ட வகையில் இப்பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அதனடிப்படையில், உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களான உதவி மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியின் தொலைபேசி விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களின் வீடுகளைப் பரிசோதிப்பதற்கான சோதனை ஆணையை பிறப்பிக்கவும் ஹொரணை பிரதான நீதவான் லக்மிணி விதானகமகே உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளர் வாவல, கங்கொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேகநபரான பாதுகாப்பு அதிகாரி புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேல்மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

'செனெஹசே கெதெல்ல' இல்ல தீ விபத்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

'செனெஹசே கெதெல்ல' இல்ல தீ விபத்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US