முருகன் ஆலயத்திற்கு கட்டாயம் சென்று வழிப்பட வேண்டிய இராசிக்காரர்கள்
இறைவழிபாட்டிற்கும் நம்முடைய ராசி நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் எந்தெந்த ராசிக்காரர்கள் சென்றால் யோகம் கிட்டும் என்பதை அறிந்துக்கொள்வோம்.
முருகப்பெருமானின் வழிபாட்டு ஸ்தலங்கள் பல இருந்தாலும் அதில் இந்த திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபடும் போது வாழ்க்கையில் எல்லா விதமான ஏற்றங்களையும் பெற முடியும்.
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் முருகப் பெருமானே குருவாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
நவகிரகங்களில் குரு பகவான் மட்டுமே முழு சுப கிரகமாக இருக்கிறார்.
குருவாக அருள் புரியும் முருகன் முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்க தேவர்களின் குருவான குரு பகவான் ஆலோசனைகளை வழங்கினார்.
அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இங்கு தனக்கு நிகரான அனைத்து மரியாதைகளும் குரு பகவானுக்கும் உண்டு என்று அருள் புரிந்தார்.
இவ்வாறு அருள் புரிந்ததோடு மட்டுமின்றி அங்கு அவர் குருபகவானாகவே அமர்ந்து அனைவருக்கும் அருளாசியும் புரிந்து வருகிறார்.
இதுவே இந்த ஸ்தலத்தினுடைய முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
“குரு பார்க்கின் கோடி நன்மை "
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்றத்தை சந்திக்க வேண்டும் எனில் அவருக்கு குருபகவானின் அருளாசி நிச்சயமாக தேவை. அத்தகைய அருளை வாரி வழங்கும் புண்ணிய ஸ்தலமாக இந்த திருச்செந்தூர் விளங்குகிறது.
அது மட்டும் இன்றி அவர்கள் பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் அடைந்து கோடீஸ்வர யோகத்தை பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்ய வேண்டிய இராசிக்காரர்கள்
மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம், இந்த ஆறு இராசிக்காரர்களும் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை முழுமையாக வழிபட்டு வந்தால் அவர்களுடைய வாழ்க்கை அவர்களே நினைத்துப் பார்க்க முடியாத அளவு மாறி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதிலும் இந்த ராசிக்காரர்கள் இவர்களுடைய ஜென்மம் நட்சத்திர நாளன்று இந்த கோவிலுக்கு செல்லும் போது அதனுடைய பலன் அபரீதமாக இருக்கும்.
சிறப்பு பலன்களை பெறும் இராசிக்காரர்கள்
தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களின் ஆதிக்கமான தெய்வமே குரு பகவான் தான்.
குருவின் ஆதிக்கத்தை கொண்ட இந்த ராசிக்காரர்கள் குரு ஸ்தலமான திருச்செந்தூர் சென்றால் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் நல்ல நிலையை அடையும்.