அச்சத்தின் பிடியில் அம்பாறை மக்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றதனால் பிரதேமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே செல்வதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இரவிலும் முதலைகள் நடமாட்டம்
குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கினறனர்.
அம்பாறை மாவட்டத்தின் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.
மேற்படி பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறன. தற்போது வேளாண்மை செய்கை, அறுவடை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்களை அண்டிய பகுதிகளில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றன.
கால்நடைகளுக்கும் ஆபத்து
கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லையென மக்கள் கூறுகின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.