சாணக்கியன் சுமந்திரன் போன்றவர்கள் குளறுபடி! கஜேந்திரன் அதிரடி
துரோகத்தனம் கொண்ட கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது., கல்முனை விடயத்திலே அரசியல் கட்சிகள் அக்கறை இல்லாமல் இருக்கின்றது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் மோசமாக எழுந்த நிலையில் அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இருந்தது, அதனால் அந்த சில தரப்புகள் உடன் இணைந்து அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பில் கலந்துகொண்டோம்.
உண்மையிலே கல்முனை விவகாரத்தை நாங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசுபொருளாக மாற்றி இருந்தோம்.
இந்த நேரத்தில் இது தொடர்பாக எல்லா தரப்பும் சேர்ந்து பேச வேண்டும் என்ற அழுத்தம் மக்கள் மட்டத்தில் எழுந்த்து. இந்த நிலையில்தான் இந்த மூன்று தரப்பும் சேர்ந்து பேசக் கூடியதாக இருந்தது, ஆனால் இதனை அடிப்படையாகக் கொண்டு இவர்களுடன் இணைந்து செயற்படுதல் என்பது சாத்தியமான ஒன்றல்ல கடந்த காலத்திலே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் போது நாங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்து இருந்தாலும் அதில் பிரதான தரப்பாக இருக்கக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் துரோகத்தை செய்தது.
அந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தை உண்மையிலே ஏற்பாடு செய்தது வேலன் சுவாமிகள் ஆனால்கூட்டமைப்பு தரப்பு திட்டமிட்டு ஒரு நிகழ்ச்சி நிரலை இரகசியமாக அரங்கேற்றி பொத்துவில் போராட்டம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திலிருந்து ஒரு 500 மீட்டர் அப்பால் தங்களுடைய கும்பலை கொண்டு தங்களுடைய பதாகைகளை வைத்துக் கொண்டும் அந்த போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி அதன்மூலம் தாங்களே அந்த போராட்டத்தை ஆரம்பித்ததாக காட்டினர்.
அதேபோன்று நிறைவு செய்யும் இடத்திலும் சாணக்கியன் சுமந்திரன் போன்றவர்கள் குளறுபடிகளை செய்து தாங்கள் தான் போராட்டத்தை ஏற்பாடு செய்தது போன்ற மாயையை ஏற்படுத்தினர், அதேபோன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் நாங்கள்தான் இந்த போராட்டத்தை 10 பிரச்சினைகளை முன்வைத்து நடத்தினோம் என்று குறிப்பிட்டார்.
அதிலே சர்வதேச நீதிமன்ற விசாரணையை, ஒற்றையாட்சி நிராகரிக்கின்ற விடயத்தை மறைத்துவிட்டார், அதேநேரம் தமிழ்தேசம் அங்கீகரிக்கின்ற சமஸ்டி வேண்டும் என்பதையும் அவர் மறைத்துவிட்டார் இவ்வாறு ஒற்றுமையின் பேரால் நாங்கள் கொடுத்த வாய்ப்பை அறுதிப் பெரும்பான்மை என்ற பெயரில் தமிழினத்துக்கு எதிராக அந்தப் பேரணியில் மாற்றி இந்தியாவின் தேவைக்கேற்ப அவர்கள் உள்ளக விசாரணைகளை தீர்மானத்தை வலியுறுத்தினார்கள்.
இப்படியாக துரோகத்தை செய்கின்ற இவர்களை நம்பி எந்த ஒரு இடத்திலும் நாங்கள் பயணிக்க முடியாது, அதே போல் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இதற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது.
இதில் அமைப்புகளின் சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இணைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் மனித உரிமைகள் பேரவையினால் எந்த பயனும் இல்லை.
அரசாங்கத்துக்கு பத்து வருடங்களாக பொறுப்புக்கூறலை செய்ய எந்தவித விருப்பமில்லை என்பதை ஆதாரங்களோடு சேர்த்து ஒரு காத்திரமான கருத்தை வெளியிட்ட நிலையில் பின்னர் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் தேவைக்கேற்ப தாங்கள் அறுதிப் பெரும்பான்மை கொண்ட கட்சி என்று கூறிக்கொண்டு அவர்கள் ஒரு கடிதத்தை அனுப்புகிறார்கள், 46 கிழ் தீர்மானத்தை வரவேற்பதாக இப்படிப்பட்ட நயவஞ்சகமாக செயல்படுகின்ற அவர்களோடு நம்பி சேர்ந்து வேலை செய்கின்ற போது மக்கள் ஓர் மாயைக்குள் தள்ளப்படுவார்கள் எல்லாம் ஒற்றுமையாக சேர்ந்து விட்டார்கள் என்று.
ஆனால் இப்படிப்பட்ட தோற்றப்பாடுகளை காட்டி மக்களை ஏமாற்றி அதிகாரத்தை தமது கையில் எடுத்த பிறகு இனத்தை கொண்டு தாரைவார்த்ததுதான் அவர்களுடைய வேலையாக இருந்தது சில இடங்களில் சேர்ந்து சென்று மக்களுடைய பிரச்சினைகளை பேசுகின்றோம் ஆனால் ஒட்டுமொத்தமாக அரசியல் தீர்வு தொடர்பாக அல்லது பொறுப்புக்கூறல் தொடர்பாக அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் தமிழர் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.
அப்படிப்பட்ட துரோகத்தனத்தோடு எங்களால் ஒத்துப்போக முடியாது இவர்கள் ஒருபோதும் நம்பக் கூடியவர்கள் அல்ல அவர்கள் இந்தியாவின் நலனுக்காக தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களை கருவறுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் தமிழினத்தின் நன்மைகளை பலியிடுகின்றவர்களாகவே கூட்டமைப்பு எப்போதுமே இருந்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்