இலங்கையிலிருந்து அகதிகளாக தப்பியோடும் மக்கள்

Sri Lanka Economic Crisis United States of America Sri Lankan political crisis Sri Lanka Navy
By Independent Writer Jul 31, 2022 12:44 PM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனையும் பொருளாதார ரீதியாக -அரசியல் ரீதியாக- சமூக ரீதியாக பாதித்துக்கொண்டிருக்கிறது.

போர் காலங்களைப் போலவே தற்போதும் மக்கள் இலங்கையில் வாழ முடியாது என எண்ணி படகு வழியாக இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தஞ்சமடையும் நிகழ்வுகள் அன்றாடம் தொடர்கின்றன. இந்தியாவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செல்ல முயன்று இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த பேர் அவுஸ்திரேலிய கடல் பகுதிக்குள் சென்ற போதிலும் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

இதில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள். இலங்கையிலிருந்து அகதிகள் வருவதை கருத்தில் கொண்டுள்ள அவுஸ்திரேலிய அரசு, ஆயிரக்கணக்கான டொலர்களை படகு வழியாக வருபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது.

மேலும்,

இலங்கை மீன்பிடி படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜி.பி. எஸ் கருவிகளை பொருத்தவதற்கான உதவிகளை அவுஸ்திரேலிய அரசு வழங்குகிறது.

அந்த வகையில், இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறும் சிக்கலை சட்ட ஒழுங்கு பிரச்சனையாகவே அவுஸ்திரேலிய அரசு அணுகுகிறது என்பதை உணர்த்துகிறது. உண்மையில், அது சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு அப்பாலான நீண்டகால அரசியல் இன ஒடுக்குமுறை பிரச்சினை.

தி கார்டியன் ஊடகத்தில் முன்னாள் அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி எழுதியுள்ள கருத்துக் கட்டுரையில், ‘பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தின் கதை பரவலாக அவுஸ்திரேலிய மக்களுக்கு தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக அவர்கள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இந்த விடுதலையை பொதுமக்கள் (தொழிற்கட்சியின்) சாதனையாக கொண்டாடினார்கள். ஆனால் உண்மையில் எவ்வித அடிப்படை மாற்றமும் நிகழவில்லை.

பிற அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்படவில்லை. அரசின் கொள்கை மாறவில்லை’ என குறிப்பிட்டுள்ளார். இந்த முரண்பாடு வெள்ளை மீட்பர் கலாச்சாரத்தின் அடிப்படை அம்சமாகும்.

கருப்பினத்தவர்கள் அல்லது பிற இனத்து மக்களை காப்பாற்றும் மீட்பர்களாக வெள்ளையர்கள் தங்களை தாங்களே கருதிக்கொள்வதே வெள்ளை மீட்பர் கலாச்சாரம் எனப்படுகிறது. இந்த கலாச்சாரம், தொடரும் அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என முன்னாள் அகதி பெஹ்ரூஸ் பூச்சானி விமர்சித்திருக்கிறார்.

இலங்கையிலிருந்து அகதிகளாக தப்பியோடும் மக்கள் | People Fleeing Sri Lanka As Refugees

இது புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும். ஆதலால் அவுஸ்திரேலிய அரசு மற்றும் இன்னும் பிற மேற்குலக நாடுகள் தமிழ் அகதிகள் வருகையை இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசின் கண்கொண்டு பார்க்காமல் மனிதாபிமான அல்லது தமிழர்கள் கண்கொண்டு பார்க்க வேண்டும்.

அதுவே நியாயமானது. அண்டை நாடான இந்தியா குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் தங்கியுள்ள தமிழ் அகதிகளின் குடியுரிமை கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டும். இது காலத்தின் தேவை.


மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US