உக்ரைனில் கொத்துக் கொத்தாக புதைக்கப்பட்ட மக்கள்! வெளியான பகீர் தகவல்
ரஷ்ய உகரைன் போர் ஒருமத்தை கடந்துள்ள நிலையில், உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் காட்டுமிரண்டித்தனமான ஷெல் தாக்குதலால் 10 நாட்களுக்கு முன்பு உடல்களை அடக்கம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் டிட்யானா லோமகினா கூறியுள்ளார்.
அதேவெளை தெற்கு துறைமுகமான மரியபோலில் குறைந்தது 5,000 பேர் ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ளதாகவும் 10,000 பேர் வரை கூட இறந்திருக்கலாம் என்றும் ஒரு மூத்த உக்ரேனிய அதிகாரி கூறியுள்ளார்.
இதனிடையில் மனிதாபிமானப் பேரழிவின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் மக்கள். சிக்கியுள்ள மக்களை மரியுபோல் நகரத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும் என்று மேயரின் செய்தித் தொடர்பாளர் Boichenko தெரிவித்தார்.
அத்துடன் ரஷ்ய கூட்டமைப்பு எங்களுடன் விளையாடுவதாக தெரிவித்த அவர், நாங்கள் படையெடுப்பாளர்களின் கைகளில் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மரியபோலில் இதுவரை 210 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 5,000 பேர் புதைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், புதைக்கப்படாத உடல்கள் வரிசையாக தெருக்களில் வைக்கபட்டுள்ளதாக அதிரவைக்கும் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டரினா சுகோம்லைனோவா வெளியிட்டுள்ளார்.