கிளிநொச்சியில் அரச, தனியார் பேருந்துகளால் அவதியடையும் மக்கள்!
கிளிநொச்சியில் அரச, தனியார் பேருந்துளின் போட்டியால் பயணிகள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்றையதினம் (18-07-2024) பிற்பகல் 2.45 மணியளவில் இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழ்.மக்களுக்காக உண்மையாக செயற்பட்டது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை! வைத்தியர் அர்ச்சுனா
பயணிகளை ஏற்றுவதற்கு முண்டியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் இம் முரண்பாட்டை தீர்த்து பயணிகள் பாதுகாப்பாக பொது போக்குவரத்தினை பயன்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.