வீதியைக் கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த கதி ; கார் சாரதி கைது
லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொனராகலை - மாத்தறை வீதியில் 21வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நேற்று (23) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லுனுகம்வெஹெரவிலிருந்து தனமல்வில நோக்கிச் சென்ற கார் ஒன்று, வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரியொருவர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த பாதசாரி, லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் லுனுகம்வெஹெர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், லுனுகம்வெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.