இது நடக்காமல் பார்த்துக் கொள்வது மக்களின் கையிலே உள்ளது! பிரதி பொலிஸ்மா அதிபர்
அனைத்து மக்களுக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு ஆதரவு வழங்கினால், அடுத்த சில நாட்கள் நாட்டில் அமைதியான சூழல் நிலவும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் நாட்களில், தேர்தல் வன்முறைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, நாடாளவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களை பாதுகாப்பதற்காக 63,000 பொலிஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக 241 கலகம் அடக்கும் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இதனையடுத்து, நாட்டின் முப்படையைச் சேர்ந்த 11,000 அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் தேவை ஏற்பட்டால் அவர்களை அழைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுமார் 3,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 13,000 அதிகாரிகளின் ஆதரவுடன் நடமாடும் ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.