பேருந்தில் தவற விடப்பட்ட மியான்மார் பிக்குவின் பணம் மற்று ஆவணங்கள் ; இராணுவ வீரரின் செயல்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் மியான்மார் நாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவருக்குச் சொந்தமான, பணம் மற்றும் மதிப்புமிக்க ஆவணங்கள் அடங்கிய பணப்பையைத் திருப்பிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புறக்கோட்டையிலிருந்து அவிசாவெல்லாவிற்கு பேருந்தில் பயணித்தபோது, மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஞானோ தேரோ என்பவருக்குச் சொந்தமான 80,000 ரூபாய் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பை 6ஆம் திகதியன்று காணாமல் போனது.

இராணுவ வீரரின் நேர்மை
இந்நிலையில் பிக்குவின் பை , இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் லான்ஸ் கோப்ரல் ரத்நாயக்க கே.கே.பீ.கே.வின் கைகளுக்கு பேருந்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
பின்னர் அந்தச் சிப்பாய், கொடகம புராண விகாரையின் விகாராதிபதி கொட்டிகல நந்தரத்ன நாயக்க தேரருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துடன் , சம்பந்தப்பட்ட மியான்மார் நாட்டு பிக்குவை தொடர்புகொண்டு, கொடகம புராண விகாரையில் அச்சொத்துக்கள் அனைத்திற்கும் உரிமையாளராக இருந்த வெளிநாட்டு பிக்குவிடம் அனைத்தையும் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

இராணுவ வீரர் வெளிப்படுத்திய நேர்மையையும் ஒழுக்கத்தையும் மியான்மார் நாட்டு பிக்குவும் விகாரையின் விகாராதிபதியும் பெரிதும் பாராட்டினர். நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்கும் ஒரு வீரரின் இந்தச் செயல் ஏனைய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு நல்ல முன்மாதிரி என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.