விடுதலைப் புலிகள் தலைவர் தொடர்பில் அவர் உண்மையை பேசவில்லை!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து, என்னைப் பொறுத்தவரையில் உண்மைக்கு புறம்பானதாகவே கருதுகின்றேன் என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியாளர் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடன் நான் தொடர்பில் இருக்கின்றேன், விரைவில் அவர் நலமுடன் வருார் என பழ. நெடுமாறன் கூறியிருந்தார்.
தனிப்பட்ட ரீதியில் நான் நினைக்கின்றேன் அவர் உண்மைப் பேசவில்லை. தர்க்கரீதியாக பார்த்தால், நெடுமாறனின் கருத்தில் இரண்டு காரணங்கள் தென்படுகின்றது, ஒன்று தன்னுடைய சொந்த அரசியல் நலனுக்காக அவர் இதனை கூறுவதாக இருக்கலாம்.
ஏனெனில், எந்தவொரு முக்கியத்துவமும் இல்லாமல் இருந்த சூழ்நிலையில், இது தேசிய மட்டத்திலான செய்தியாக அடிபடுவதற்கான ஒரு மாற்றம் மிக்க செயற்பாட்டாளராக அவர் மாறியிருக்கின்றார்.
மேலும், தனிப்பட்ட ரீதியில் அவருக்கு அதில் ஒரு நலன் இருப்பதாக கருதுகின்றேன்.
இவ்வாறு இல்லை என்றால், இந்திய புலனாய்வுத் துறையினருடைய உந்துதல் காரணமாக இவ்வாறான ஒரு செய்தி கூறப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.