வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக கடிதம் அனுப்பிய நோயாளர் நலன்புரிச் சங்கம்! அம்பலப்படுத்திய நபர்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி அர்ச்சுனாவுக்கு எதிராக நோயாளர் நலன்புரிச் சங்கமே அவரை சேவையில் இருந்து நீக்கவேண்டும் என கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நபரொருவர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த நபர் வெளியிட்ட பதிவில்,
சாவகச்சேரி வைத்தியசாலை இடம்பெறும் பிரச்சனை தொடர்பில் மக்கள் ஒன்று திரண்டபோதும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் என் எந்த உண்மையும் கூறவில்லை.
மேலும் சாவகச்சேரி வைத்தியசாலை விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் வந்தாலும் சரி, நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் வந்தாலும் சரி எங்களுக்கு ஒரு சரியான தீர்வு வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சாவகச்சேரி நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும், வைத்தியசாலையின் வைத்தியரும் வைத்தியசாலையில் இருந்த ஏராளமான பொருட்களை, மக்களின் சிறுநீரகத்தை திருடி விற்றதை அம்பலப்படுத்த போவதாகவும், இதனை ஜனாதிபதி ரணிலிடம் கொண்டு சேர்க்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இச்சம்பவம் தொடர்பில் நல்ல பதில் ஒன்றை தருவோம் இல்லையென்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வெள்ளிக்கிழமைக்குள் ஒரு முடிவு வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.