வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து ; பெரும் ஆபத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள்
நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்தொன்று வெள்ள நீரில் சிக்கியிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

சீரற்ற காலநிலை
இதனையடுத்து, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, லொறி ஒன்றின் உதவியுடன் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
பேருந்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றப்படும் காட்சிகளும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளன.
மோசமடைந்து வரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அந்த இளைஞர்களின் விரைவான செயல்பாடும் தைரியமும் ஒரு பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்க்க உதவியுள்ளது.