இலங்கையில் உள்ள ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை!
நாடளாவிய ரீதியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள், அந்தந்த ரயில் நிலையங்களின் பணியாளர்களுடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தினால், அந்த ரயில் நிலையங்களில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தெஹிவளை, பம்பலப்பிட்டிய மற்றம் மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் பயணச்சீட்டு விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலைய அதிபர்களும் பணியில் இருந்து விலகியுள்ளனர்.
கோட்டை, மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினால் அனைத்து ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.