மீதிப் பணம் கேட்ட பயணி மீது தாக்குதல்; நடத்துனருக்கு நேர்ந்த கதி
தனியார் பயணிகள் பேருந்தில் பயணி ஒருவர் மீதிப் பணமாக ரூ.5 கேட்டதால் ஆத்திரமடைந்து, அவரைத் தாக்கி பேருந்தில் இருந்து கீழே தள்ளியதாகக் கூறப்படும் நடத்துநரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர், மீட்டியாகொட, மகவெல பகுதியைச் சேர்ந்தவராவார்.

பேருந்து நிலையத்தில் கைது
நடத்துநரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பயணி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபரான நடத்துநர் அம்பலாங்கொடை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் ‘கரந்தெனிய சுத்தா’ என அழைக்கப்படும் நபரின் மைத்துனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.