2024 வரவு செலவுத் திட்டத்திற்கான நாடாளுமன்ற அட்டவணை வெளியீடு!
2024 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவு செலவுத் திட்டம்) இரண்டாம் வாசிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் நவம்பர் 13 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன்பிறகு, 2024 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 14 முதல் 21 வரை ஒரு வார காலத்திற்கு விவாதிக்கப்படும்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 21 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. குழு நிலை விவாதம் நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை 19 நாட்களுக்கு நடைபெறும்.
அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதன்படி, வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெறும் காலப்பகுதியில், காலை 09:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு விவாதம் ஒவ்வொரு நாளும் வாக்களிக்கும் திகதி தவிர மாலை 06:00 மணி முதல் மாலை 06:30 மணி வரை நடைபெறும்.