உயர்தர பாடசாலை மாணவியின் முடிவால் கலங்கும் பெற்றோர்
இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் அதிபரும், வகுப்பு ஆசிரியரும் கையொப்பமிட மறுத்ததால், பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட துயர சமபவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அலைகழிக்கப்பட்ட மாணவி
இந்த சம்பவம் கண்டி - பன்வில நாரம்பனாவ பகுதியில் பதிவாகியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிடுவதற்காக அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியையை பல தடவைகள் சந்திக்க முற்பட்ட போதிலும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி உயிரை மாய்த்து கொள்ள முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குறித்த மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
.
மேலும் , சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.