பாடசாலைக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் விபரீத முடிவு
பாடசாலைக்கு செல்லுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் மாணவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள விறகு கொட்டகையில் தூக்கிட்டு (08) உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
பல நாட்களாக பாடசாலைக்கு செல்லாத மாணவன்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கன் தோட்டத்தில் வசித்து வந்த முருகானந்தன் அபிஷேக் என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட நோர்வூட் டன்கன் தோட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் 09ஆம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக கூறப்படுகின்றது.
பல நாட்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு செல்லாததால் பெற்றோர் அவரை (08) பாடசாலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பாடசாலைக்கு செல்லாத மகன் தொடர்பில் பெற்றோர்கள் தேடலை மேற்கொண்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
உயிரிழந்த மாணவரின் sஅம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.