கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் : திஸ்ஸ விதாரண
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு தீர்வாக அமையாது. அது அவசரத்தில் தயாரிக்கப்பட்டவை என்றும் நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை உருவாக்க நீண்டகால மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண (Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒரே வழி கொரோனா தடுப்பூசி இல்லை என்றும் நாட்டில் கொரோனா தொற்று மிக விரைவாகப் பரவுவதால் தற்போது மிக ஆபத்தான நிலையில் உள்ளது என்றும் நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.