திருகோணமலை மாவட்டத்தில் முடங்கிய வியாபார நிலையங்கள்
கொரோனா அச்சம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை முதல் அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் நோயாளர்களது எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பினை அடுத்து திருகோணமலை வர்த்தக சம்மேளனம் மற்றும் திருகோணமலை நகர சபையினால் நேற்றையதினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய குறித்த வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அதன்படி மருந்தகங்கள், அத்தியாவசிய சேவைக்கான வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மொத்த மீன் சந்தை திருகோணமலை மத்திய பொதுச்சந்தை என்பன மூடப்பட்ட நிலையில், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் என்பன திறந்திருப்பபதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.