காகித தட்டுப்பாடு; மாணவர்களுக்கு சிக்கல்
காகிதத் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதனை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமை யாளர் ரஞ்சித் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை பாடப் புத்தகங்களின் 40 இலட்சம் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெற்றிக் தொன் தாள்கள் தேவைப்படுவதாக தெரிவித்த அவர், ஒரு மெட்ரிக் தொன் தாளின் விலை 2 இலட்சம் ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாடப் புத்தகங்களை அச்சிடுவதே அரச அச்சக கூட்டுத் தாபனத்தின் முக்கிய வருமானம் என்றும், இதை இழந் தால் நிறுவனத்துக்கு சுமார் 120 கோடி ரூபா இழப்பு ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக, அரச நிறுவனங் களுக்கு ஆவணங்களை வழங்குவதற்குத் தேவை யான கடதாசியைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள தாகவும் இரண்டு லொத்தர் சீட்டு கள் அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.