கணைய புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள்
கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் பித்தப்பைக்கு அருகில் வயிற்று குழியில் இருக்கும் ஓர் முக்கிய உறுப்பு.
இது செரிமான சாறுகள், இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்கள் என இராசயனங்கள் சுரக்கும் உறுப்பு ஆகும். கணையத்தில் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தொடங்கும் போது கணைய புற்றுநோய் உருவாகிறது
கணைய புற்றுநோயின் வகைகள்
எக்ஸோகிரைன் கட்டிகள்
கணைய புற்றுநோய் கட்டிகளில் 90% அதிகமானவை எக்ஸோகிரைன் கட்டிகள். கணைய புற்றுநோயின் பொதுவான அடினோக்கார்சினோமா. இது உறுப்புகளை வரிசைப்படுத்தும் செல்களில் தொடங்குகிறது.
நியூரோ எண்டோகிரைன் கட்டிகள்
கணையக்கட்டிகளில் 10% குறைவானவை நியூரோஎண்டோகிரைன் கட்டிகள். ஐலெட் கார்சினோமா என்பது இதன் மற்றொரு பெயர்.
கணைய புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
கணையத்தில் கட்டிகள் வந்தால் ஆரம்ப கட்டத்தில் இத்தகைய அறிகுறிகள் தென்படலாம்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை என்பது கண்கள் மற்றும் தோலின் மஞ்சள் நிறத்தை கொண்டுள்ள நிலை. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோருக்கு முதன்மை அறிகுறிகளில் மஞ்சள் காமாலை முதல் அறிகுறியாக இருக்கும்.
மஞ்சள் காமாலை பிலிரூபின் அதிகரிப்பதால் உண்டாகும் நிலை (இது கல்லீரலால் உருவாக்கப்படுகிறது)பிட்த நாளத்தின் வழியாக குடலுக்குள் சென்று அங்கு கொழுப்பை உடைக்கும் பிலிரூபின் இறுதியில் மலத்துடன் விட்டுவிடுகிறது.
இந்த பித்த நாளம் தடுக்கப்படும் போது பித்தம் குடலை அடைய முடியாமல் பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது.
கணையத்தின் தலைப்பகுதியில் தொடங்கும் புற்றுநோய்கள் பித்த நாளத்துக்கு அருகில் இருக்கும்.
இது புற்றுநோய்கள் குழாயில் அழுத்தி மஞ்சள் காமாலையை உண்டு செய்யும்.
சில நேரங்களில் சிறிய கட்டிகள் குழாயில் கூட அழுத்தலாம். இப்படி கணையத்தின் உடலிலோ அல்லது வாலிலோ தொடங்கும் புற்றுகட்டிகள் சில சமயங்கள் மற்ற உறுப்புகளுக்கு பரவும் வரை அழுத்தம் கொடுக்காது.
மஞ்சள் காமாலை வந்தாலே கணைய புற்றுநோயா என்று பயம் வேண்டாம்.
இது உடல் செயல்பாடு கல்லீரல் கணையம் பாதிப்பை எட்டியுள்ளது என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
மருத்துவரை அணுகும் போது அவரே சரியான பரிசோதனையை செய்து விடுவார்.
மேல் வயிறு வலி
மேல் வயிறு, முதுகு வலி, வயிற்று வலி என்பது கணைய புற்றுநோயின் பொதுவான அறிகுறி.
பெரிய அளவில் வளர்ந்த கட்டிகள் அருகில் உள்ள உறுப்புகளை அழுத்தி அசெளகரியதோடு அதிக வலியையும் உண்டு செய்யும்.
கணையத்தை சுற்றி உள்ள நரம்புகளுக்கு பரவுவதால் இவை முதுகு வரை வலியை உண்டு செய்யும்.
கணையத்தின் உடலில் அல்லது வாலில் தொடங்கும் புற்றுநோய்கள் பெரிதாக வளர்ந்து அழுத்தும் போது வயிறு சுற்றி உள்ள உறுப்புகள் அனைத்துமே அசெளகரியத்தை உண்டு செய்யும்.
வயிறு வலி முதுகுவலி வந்தால் உடனே கணைய புற்றுநோயா என்று அச்சம் வேண்டாம்.
மருத்துவரை அணுகி காரணம் அறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
வாந்தி மற்றும் குமட்டல் அதிகரிப்பு
கணைய புற்றுநோய் இருந்தால் குமட்டல் மற்றும் வாந்தி கூட உண்டாகலாம். வயிற்றின் முடிவில் வளர்ந்த கட்டிகள் செரிமான அமைப்பு உணவின் பாதையை தடுக்கலாம்.
இதனால் உணவுக்கு பிறகு குமட்டல், வாந்தி மற்றும் வலி உண்டாகலாம். சாப்பிட்ட பிறகும் கூட இது மோசமான வாந்தி மற்றும் குமட்டலை உண்டு செய்யலாம்.
மோசமான பசியின்மை இருப்பதால் இவர்களுக்கு திட்டமிடப்படாத எடை இழப்பு உண்டாகலாம்.
இவர்களுக்கு பசி குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பித்தப்பை அல்லது கல்லீரல் வீக்கம்
கணையத்தில் உள்ள கட்டி பித்த நாளத்தை தடுக்கும் போது பித்தப்பை அதிகப்படியான பித்தத்தை நிரப்பி இருக்கலாம்.
இது வழக்கமான பரிசோதனைகள் போது மருத்துவர் கண்டறியலாம். வலது விலா எலும்பு கூட்டின் கீழ் பெரிய கட்டி இருக்கலாம்.
அல்லது சிடி ஸ்கேன் அல்லது காந்த அதிர்வு இமேஜிங் போன்ற சோதனைகளில் இருக்கலாம்.
கணைய புற்றுநோய் கல்லீரல் வரை பரவி இருந்தால் கல்லீரல் வீக்கம் இருக்கலாம்.
இதை இமேஜிங் மூலம் மருத்துவர் கண்டறியலாம். கணைய புற்றுநோய் சர்க்கரை நோய் உண்டு செய்யும்
சர்க்கரை நோய்
இது இன்சுலின் உருவாக்கும் செல்களை அழிக்கின்றன. இதன் அறிகுறிகளில் தாகம் மற்றும் பசி உணர்வு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை.
கணைய புற்றுநோய் இருக்கும் போது அது உடலில் இரத்த சர்க்கரை அளவுகளில் சிறிய மாற்றங்களை உண்டு செய்யும்.
நீரிழிவு நோய் அறிகுறிகளை உண்டு செய்யாது.
இரத்த பரிசோதனைகள் மூலம் இதை சரியாக கணிக்க முடியும்.
இரத்தம் உறைதல்
இரத்தம் உறைதல் சில நேரங்களில் கணைய புற்றுநோய் இருப்பதற்கான முதல் அறிகுறி இது என்றும் சொல்லலாம்.
பெரிய நரம்பியல் பெரும்பாலும் காலில் இரத்தம் உறைதல் ,இது ஆழமான நரம்பு இரத்த உறைவு என்று அழைக்கப்படுகிறது.
வலி, வீக்கம், பாதிக்கப்பட்ட காலில் வெப்பம் போன்றவை சொல்லலாம். சில நேரங்களில் கட்டி உடைந்து நுரையீரலுக்கு செல்லலாம்.
இது சுவாசிப்பதை கடினமாக்குவதோடு மார்பு பகுதியில் வலியையும் உண்டு செய்யும் .
நுரையீரலில் இரத்தம் உறைதல் என்பது நுரையீரல் தக்கடையடைப்பு என்று அழைக்கப்படுகிறது.