உருவாகும் பஞ்சகிரக யோகம் ; இந்த ராசிக்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது
பெப்ரவரி மாதத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், செல்வத்தின் காரணியான சுக்கிரன், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மற்றும் நிழல் கிரகமான ராகு ஆகியவற்றால் சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் பஞ்சகிரக யோகம்.
முக்கியமாக இந்த யோகம் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் உருவாகவுள்ளது. இப்படி உருவாகும் யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
சிம்மம்: சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் மற்றும் அரசு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் நிலைமை வலுவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
தமிழர் பகுதியில் மாயமான இளைஞன் ; நீண்ட தேடுதலின் பின் காத்திருந்த பேரிடி, பெரும் சந்தேகத்தில் பொலிஸார்
மேஷம்: மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுவடையும். ஒவ்வொரு திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்: கும்ப ராசியின் முதல் வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிககளிடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் இந்த யோக காலத்தில் பதிவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பல வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.