மனைவிக்கு முடி கொட்டுகின்றது ; விவாகரத்து கோரிய கணவனின் மனிதாபிமானமற்ற செயல்
சில வீடுகளில் பெண்களின் தலைமுடிகள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும், அதனை எடுத்து ஒரு பையில் போட்டு வைப்பது பெண்களுக்கு பெரும் வேலையாக இருக்கும். எனினும், மனைவியின் முடியால் விவாகரத்து கேட்ட கணவன் தொடர்பிலான செய்தி வெளியாகியுள்ளது.
மனைவிக்கு முடி கொட்டியதைக் காரணங்காட்டி கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

விவாகரத்து
பாதிக்கப்பட்ட பெண் 36 வயது லீ. சரும நோய் காரணமாக அவருக்கு முடி கொட்டியுள்ளது அதனால் லீ வயதானவராகத் தோன்றியுள்ளார். பொது இடங்களில் அசருக்கு கேலியும் கிண்டலும் அதிகாரித்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட பிறகு லீயின் கணவர் அவரைக் கண்டுகொள்ளவில்லை. லீக்கு உறுதுணையாக அவர் மருத்துவமனைக்குச் செல்லவில்லை; மருத்துவச் செலவுகளை ஏற்கவில்லை.
16 ஆண்டுகளுக்குப் பிறகு முடி உதிர்வின் காரணமாக திருமண வாழ்வு முறித்து கொள்ளவுள்ளதாக லீயின் கணவர் தெரிவித்துள்ளார்.
விவாகரத்தை ஏற்றுக்கொண்ட லீ கடந்தகாலத்தை விடுத்து மருத்துவச் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவிருப்பதாகக் கூறினார். அவரது கதை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. பலரும் அவருக்கு ஆறுதலாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.