யாழ் இளவாலையில் தீயில் எரிந்த நாசமாகிய பனைகள்!
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெய்கண்டான் பாடசாலைக்கு அருகே உள்ள காணியில் நின்ற பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம் இன்றைய தினம் இரவு (27-07-2023) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பனைகள் எரிவதாக ஊரவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்தல் வழங்கினர். அதனடிப்படையில் கிராம சேவகர் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இந்த நிலையில் அங்குவந்த பொலிஸார் மக்களது உதவியுடன் தீயை அணைத்தனர்.
எனினும் பனை மரங்கள் சில எரிந்து நாசமாகியுள்ளன.
அருகேயுள்ள பற்றைகளுக்கு தீ வைக்கும்போது அத்தீ பனையிலும் பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.