20 இலட்சம் கொடுத்து கட்டில் வாங்கிய பொதுஜன முன்னணி எம்.பி; யார் தெரியுமா?
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஹேரத் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டில் ஒன்றை கொள்வனவு செய்திருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.
இதுதவிர மேலும் மில்லியன் ரூபா செலவில் பல பொருட்களை அவர் வீட்டிற்கு கொள்வனவு செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் , மோசடிமிக்க பணத்தினால் அவர் இவ்வாறான துரித கொள்வனவுகளை செய்திருப்பதாகவும் எம்.பி நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஹேரத் அரச செலவில் தனதுவீட்டையும் புனரமைப்பு செய்திருப்பதாகவும் நாமல் கருணாரத்ன சாடியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.